×

தமிழ்நாடு அரசு சார்பில் இளையராஜாவுக்கு செப்.13ல் பாராட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்கின்றனர்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு செப்.13ல் தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்துகிறது. சிம்பொனி இசை கச்சேரிக்கு செல்லும் முன்பு இளையராஜாவை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இசை கச்சேரி முடிந்து திரும்பிய இளையராஜா, முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு செப்.13ல் தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்துகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் இளையராஜாவின் சிம்பொனி கச்சேரி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு நடத்தும் பாராட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி வெளியாகி 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

Tags : Tamil Nadu government ,Ilayaraja ,Rajinikanth ,Kamal ,Chennai ,M.K. Stalin ,Chief Minister ,Ilayaraja… ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...