பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் முருங்கையில் நவீன சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

பெரியகுளம், டிச. 17: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீ்ழ் காய்கறி அறிவியல் துறை சார்பில் முருங்கையில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் ஆறுமுகம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முகாமில் காய், இலை, விதை உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், முருங்கையில் மதிப்புக்கூட்டுதலுக்கான வழிமுறைகள், வணிக ரீதியான வாய்ப்புகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து பூச்சி, நோயியல் துறை தலைவர் முத்தையா முருங்கை சாகுபடியில் பூச்சி, நோயினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தேவையான இயற்கை- ரசாயன முறை கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் குறித்து விவரித்தார். பின்னர் விவசாயிகளுக்கான வயல்வழி பார்வை நடந்தது. இப்பயிற்சி ஏற்பாடுகளை காய்கறி அறிவியல் துறை தலைவர் ஜானவி, தேசிய வேளாண் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் கீதாராணி, பேராசிரியர் பாலகும்பகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories:

>