×

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

திண்டுக்கல், செப். 9: கொடைக்கானலை சேர்ந்தவர் அருண்குமார் (22). இவர் கடந்த 2024ம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அருண்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சரண் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் அருண்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags : Dindigul ,Arunkumar ,Kodaikanal ,Women's… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா