×

திமுக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்

வேடசந்தூர், செப். 9: அய்யலூர் பேரூராட்சி வைரபிள்ளைபட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (எ) லட்டு (40). ஆட்டோ டிரைவர். 13வது வார்டு திமுக கிளைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு கோயில் பிரச்னை சம்பந்தமாக சிலருடன் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை எதிர்தரப்பைச் சேர்ந்த 7 பேருக்கும் மேற்பட்டோர் பரமேஸ்வரன் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பரமேஸ்வரன் படுகாயமடைந்தார். அதன்பின் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Dimuka ,Vedasandur ,Parameswaran (a) Lattu ,Vairapillaibari ,Ayyalur district ,13th Ward Dimuka ,
× RELATED ஓய்வூதியர் தின விழா