மணப்பாறை, செப்.9:மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறை காவல் சரகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இந்திரா நகரை சேர்ந்த நல்லுச்சாமி மகன் கோபிநாத்(37) என்பவரை போலீஸார் கையும் களவுமாக கைது செய்து, அவருடமிருந்து ஒரு செல்போன் மற்றும் ரூ.200 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
