துவரங்குறிச்சி, செப்.9: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்நிலையில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இடிமின்னலுடன் கனமழை பெய்ததால், மழைநீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சுற்று சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த மழையால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பெய்த மழை விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
