- தா.பழூர்
- செந்துறை பஞ்சாயத்து
- அரியலூர்
- ஏஐடியுசி
- தனசிங்
- உள்ளூர்ப்
- அரசு
- ஊழியர் சம்மேளன மாநில செயலாளர்
- மாவட்ட பொதுச் செயலாளர்
- தண்டபாணி…
அரியலூர், செப். 9: அரியலூரிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தனசிங் தலைமை வகித்தார். உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநிலச் செயலாளரும், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலருமான தண்டபாணி கலந்து கொண்டு, கிராம ஊராட்சி தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பள்ளி துப்புரவு பணியாளர்கள் உள்ளடங்கிய ஊராட்சி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் தமிழக அரசால் உள்ளாட்சி தொழிலாளர்களுக்காக பிறப்பிக்கப்பட்ட ஆணையின் படி நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தை அமல்படுத்திட வேண்டும். பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை அமல்படுத்திட வேண்டும்.
கரோனா கால ஊக்கத் தொகையை வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செப்டம்பர் 24ம் தேதியும், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செப்டம்பர் 25ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
