திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

மதுரை, டிச.17: மதுரை மாநகர் தெற்கு மாவட்ட ஜீவாநகர் கிழக்கு பகுதி, 88, 88அ ஆகிய வட்டங்களுக்கு பொறுப்பாளர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்கள் விவரம்: 88வது வட்டத்திற்கு பொறுப்பாளராக மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்த காவேரி, 88அ வட்டத்திற்கு பொறுப்பாளராக மதுரை எம்.கே.புரம் மெயின் ரோட்டை சேர்ந்த முனியசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் பொறுப்புக்குழு உறுப்பினர்களாக எம்.கே.புரம் மகாராஜன், சோலையழகுபுரம் அபிமன்யூ, அதே பகுதியை சேர்ந்த குமரன், மகாலட்சுமி கோயில் 2வது குறுக்குத்தெரு நாகராஜன், சோலையழகுபுரம் வசந்தா, திருப்பதி நகர் சரவணன், ராமமூர்த்தி நகர் 4வது தெரு பேச்சிமுத்து, மகாலட்சுமி நகர் கோயில் 5வது தெரு சையது இப்ராகீம், சோலையழகுபுரம் 2வது தெரு சிவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>