×

ஆத்தூர் அருகே ரேஷனில் கொண்டைகடலை கற்களுடன் விநியோகம் பொதுமக்கள் புகார்

சின்னாளபட்டி, டிச. 17: ஆத்தூர் அருகே ரேஷன் கடையில் தரமற்ற கொண்டைக்கடலை விநியோகிக்கப்பட்டதால் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது கார்டுதாரர்களுக்கு இலவசமாக கொண்டைக்கடலை விநியோகிக்கப்படுகிறது. கார்டு ஒன்றுக்கு 5 கிலோ சுண்டல் வழங்கப்படுகிறது.

ஆத்தூர் ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு குப்பை கழிவுகளுடன் தரமற்ற கொண்டைக்கடலை வழங்கப்பட்டுள்ளதாக கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மயிலம்மாள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் 450 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

 நேற்று முன்தினம் விநியோகம் செய்யப்பட்ட கொண்டைக்கடலை தரமற்று இருந்ததுடன், அதிகளவில் கற்களும் இருந்தன. சுத்தம் செய்த பின்னர் எடை போட்டால், 5 கிலோ சுண்டலுக்கு 2 கிலோ சுண்டல் தான் தேறியது’ என்றார்.இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி பத்மநாபன் கூறுகையில், ‘கடந்த ஒரு வருடமாக ரேஷன் கடைகளில் தரமான உணவு பொருட்களை வழங்குவது கிடையாது. இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Attur Public ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ