×

கடையநல்லூரில் சிறப்பு மருத்துவ முகாம்

கடையநல்லூர், செப். 9: கடையநல்லூரில் கே.எப்.ஏ. 1986 டிரஸ்ட், தாருஸ்லாம் கல்வி குழுமம் மற்றும் மதுரை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். தாருஸ்லாம் பள்ளி குழுமம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகாமில் மதுரை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் கவுன்சிலர்கள் முகம்மது மைதீன், செய்யது அலி பாத்திமா, அயூப், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார், முருகானந்தம், அப்சரா பாதுஷா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kadayanallur ,K.F.A. 1986 Trust ,Daruslam Educational Group ,Madurai Apollo Hospital ,Kadayanallur Municipal Council ,Mooppan Habibur Rahman ,
× RELATED ஓய்வூதியர் தின விழா