வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர், டிச. 17: வேடசந்தூர் நீதிமன்றம் முன்பு நேற்று வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகேசன் தலைமை வகிக்க, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் நாகராஜன், மூத்த வழக்கறிஞர்கள் செல்வராஜ், அபிமன்யு, கணேசன், சுந்தரம்,

பத்மநாபன், ஜெயந்தி, கமலா, செல்வக்குமார், தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் வடமதுரை காவல்நிலைய வழக்குகளை திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதால், வேடசந்தூர் நீதிமன்றத்தில் வழக்குகள் மிகவும் குறைவுவதோடு, வழக்கறிஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே இதை மாற்ற கூடாது எனக்கோரி கோஷம் எழுப்பினர்.

Related Stories:

>