×

திருட்டுகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...திருட்டு பைக்கை நிறுத்திவிட்டு விலை உயர்ந்த பைக் அபேஸ்

பெரம்பூர், டிச.17: கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 1வது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் விஷால்(27). தரமணியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று  காரணமாக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு இவரது வீட்டின் கீழ் பகுதியில் அவரது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது நள்ளிரவு அங்கு வந்த 2 மர்ம நபர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு விஷாலின் விலை உயர்ந்த பைக்கை திருடிசென்றனர். இவை அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.

சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பல இடங்களில் தேடியும் விஷாலின் இருசக்கர வாகனம் கிடைக்காததால் அவர் கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  மேலும் திருடர்கள் விட்டு சென்ற இருசக்கர வாகனம் வேறு ஒரு பகுதியில் திருடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Thefts ,bike abbey ,
× RELATED பெண் தூய்மை பணியாளர் வீட்டில் 3 சவரன்...