அம்மன் கோயில் பால்குட ஊர்வலம்

கிருஷ்ணகிரி, டிச.17: கிருஷ்ணகிரி பழையபேட்டையில், தண்டுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா முடிந்து, 48வது நாளான நேற்று மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். நேதாஜி சாலை, காந்தி சிலை வழியாக சென்று,  கோயிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் ஏராமான பக்தர்கள் பங்கேற்று,சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories:

>