×

அதிகாரிகளுக்கு துரைமுருகன் எச்சரிக்கை திருச்சியில் விவசாயிகள் 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம் வேளாண் சட்டங்களின் குளறுபடியே மத்திய அமைச்சரின் பதவி விலகல்

திருச்சி, டிச.17: திருச்சியில் 3வது நாளாக நேற்று விவசாயிகள் மழையிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அமைச்சர் பதவி விலகியது வேளாண் சட்டங்களில் உள்ள குளறுபடியை காட்டுகிறது என்று கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நேற்று 21வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் வலுத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று 3ம் நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் 3வது நாளாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் போராட்டம் நடந்தது.

இதில் திமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தை துவக்கி வைத்து கூறுகையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் உணர்வுபூர்வமானது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.

இது அவரது பதவிக்கும் அழகல்ல. பாஜ கூட்டணியில் உள்ள அகாலிதளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரே பதவி விலகியது வேளாண் சட்டங்களில் உள்ள கடுமையான குளறுபடிகளை காட்டுகிறது. எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என்றார். போராட்டத்தில் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மகளிர் அணி டாக்டர் ரொகையா, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் தரன் மற்றும் இந்திய கம்யூ.,, விசி கட்சி அரசு, புல்லட் லாரன்ஸ் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர், பெண்கள், விவசாயிகள், கல்லூரி மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Thuraimurugan ,strike ,Trincomalee ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து