ஆண்களுக்கான நவீன கு.க. சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது

திருச்சி, டிச.17: வளநாடு, இனாம்குளத்தூர், மணப்பாறை, உப்பிலியபுரம், உறையூர், துறையூர் ஆகிய பகுதிகளில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம். விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம். வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் இன்றும் (17ம் தேதி), உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உறையூர் அரசு நகர் நல மையம், துறையூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நாளையும் (18ம் தேதி) நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>