×

அமைச்சர் காமராஜ் பேட்டி ஊதிய உயர்வு வழங்க கோரி ஓஎச்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.17: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்தவாறு ஊதிய உயர்வு வழங்க கோரி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதுடன் அரசு அறிவித்தவாறு ஊதிய உயர்வினை வழங்கிட வேண்டும், 2000ம் ஆண்டுக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும், அரசு அறிவித்தவாறு தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், 3 ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணிக்கொடை மற்றும் ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி மற்றும் பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், காமராஜ், லோகநாயகி, கலியமூர்த்தி, ஆறுமுகம், திருநாவுக்கரசு, விவேகானந்தன், ஞானசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : operators ,OHT ,Kamaraj ,interview ,pay hike ,
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...