தினமும் மாலையில் படியுங்கள் காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

திருக்காட்டுப்பள்ளி, டிச. 17:  திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூடநாணல் வடக்குத்தெரு கருப்பையன் மனைவி மகமுஅம்மாள் (65). இவர் நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி- திருவையாறு சாலையில் பவனமங்கலம் தனியார் ஆட்டோ மொபைல் எதிர்புறம் காவிரி ஆற்றின் வடக்கு கரையில் ஒரு பெண் சடலம் ஒதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்து போலீசார் சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது மகமுஅம்மாள் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி எஸ்ஐ பாஸ்கரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

Related Stories:

>