வண்ணாரப்பட்டியில் புயலால் வீடு இடிந்து சேதம்

புதுக்கோட்டை, டிச.17: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஒன்றியம் வண்ணாரப்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவரின் வீடுபுயலால் இடிந்து விழுந்தது. தகவலறிந்த புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன்அரசு நேரில் சென்று பார்வையிட்டார். உடனே புதுக்கோட்டை தாசில்தார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு உடனே அரசின் மூலம் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரினார்.

Related Stories:

>