மார்கழி பிறந்ததால் பெண்கள் உற்சாகம் வீட்டு வாசல்களை அலங்கரிக்கும் வண்ண கோலங்கள்

அறந்தாங்கி, டிச.17: மார்கழி மாதம் பிறந்ததால், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வாசலில் வண்ணக்கோலமிடும் பணியை நேற்று காலை தொடங்கினர். மார்கழி மாதம் மற்ற தமிழ் மாதங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து, தங்கள் வீட்டு வாசல்களில் தண்ணீர் தெளித்து மாக்கோலமிட்டு, பின்னர் அக்கோலங்களில் வண்ணம் தீட்டுவது வழக்கம். அதன்படி நேற்று மார்கழி முதல் நாள் என்பதால், பெண்கள் அதிகாலையிலேயே தூக்கத்தில் இருந்து உற்சாகத்துடன், வீட்டின் வாசலில் வண்ணக் கோலமிட்டனர். அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தபோதிலும், மழை நின்ற நேரத்தை பயன்படுத்தியும், மழை பெய்யாத இடமாக பார்த்தும் கோலமிட்டனர்.

Related Stories:

>