×

மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை பண்ணைப்பள்ளி பயிற்சி

தா.பழூர், டிச. 17: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின்கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் வெண்மான்கொண்டான் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் அசோகன் பேசுகையில், பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு 6 வாரங்கள் நடைபெறும். மக்காச்சோள சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் நன்கு கற்றுணர்ந்து விதை நேர்த்தி செய்து அங்கக உரங்கள் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்தி நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார். கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் பேசுகையில், கோடை உழவு செய்வதன் மூலம் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். விதைநேர்த்தி, வரப்பு பயிராக உளுந்து, தட்டை பயறு மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றை பயிர் செய்வதால் பூச்சியின் தாக்குதலை பெருமளவு கட்டுப்படுத்தலாம் என்றார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் வரவேற்றார்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...