×

சீரமைக்க கோரிக்கை கொள்ளிடம் பகுதியில் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதல்


கொள்ளிடம், டிச. 17: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் அனைத்து கிராமங்களிலும் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த காலங்களில் நிவர் புயல் காரணமாக கன மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. சில இடங்களில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு இருந்து நெற்பயிர் ஓரளவுக்கு பாதிப்பிலிருந்து தப்பியது. இருந்தும் மழை நீர் தேங்கி வடிந்த பல சம்பா நெற்பயிர் வயல்களில் கடந்த சில தினங்களாக நெற்பயிரின் பசுமை நிறம் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது.

இது ஒரு இடத்தில் நிறம் மாற ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வயல் முழுமையும் உள்ள நெற்பயிரின் நிறத்தை மாற்றி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஒருபுறம் கனமழையால் வயல்கள் மூழ்கி பயிர் நாசம் அடைந்தது. மற்றொரு புறம் சம்பா நெற்பயிர் நிறம்மாறி ஒருவகையான பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மாதிரவேலூரில் மட்டும் சுமார் 50 ஏக்கரில் உள்ள சம்பா நெற்பயிர் இந்த வகையான பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எனவே வேளாண் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பூச்சி தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிந்து அதனை போக்குவதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Insect attack ,pruning ,Kollidam ,area ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி