×

முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர்

கரூர், டிச. 17: தமிழக முதல்வர் கரூர் வருகையை முன்னிட்டு 2ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி மற்றும் கொரனோ குறித்தான ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் கரூருக்குநேற்று காலை 11மணியளவில் வந்தார். மாலை 4மணியளவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேலம் புறப்பட்டு சென்றார். முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நான்கு மாவட்ட எஸ்பிக்கள், 7 ஏடிஎஸ்பிக்கள், 15 டிஎஸ்பிக்கள், 56 இன்ஸ்பெக்டர்கள், 125 எஸ்ஐக்கள் உட்பட 2041 போலீசார் நேற்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டதோடு, நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : visit ,policemen ,Chief Minister ,
× RELATED போலீஸ் வளையத்துக்குள் கடலூர் நகரம்