ராயனூர், பொன்நகர் அருகே நிழற்குடை அமைக்கப்படுமா?

கரூர், டிச. 17: ராயனூர் பொன்நகர் நான்கு ரோடு சந்திப்பு அருகே நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் அடுத்து பொன்நகர் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து தாந்தோணிமலை, கோடங்கிப்பட்டி போன்ற நான்கு வழிகளில் சாலைகள் பிரிகிறது. தினமும் நு£ற்றுகணக்கானோர் இங்கு வந்து அந்த வழியாக செல்லும் பேரூந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். இந்நிலையில், பொன்நகர் சந்திப்பு பகுதியில் ஏற்கனவே இருந்த நிழற்குடை அகற்றப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் மக்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: