மருத்துவ கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு 8வது நாளாக போராட்டம்

சிதம்பரம், டிச. 17: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கல்வி கட்டணத்தை குறைத்து வசூலிக்க வலியுறுத்தியும், அரசு மருத்துவக் கல்லூரிக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  நேற்று மாணவர்களின் 8வது நாள் போராட்டம் நடந்தது. மருத்துவமனை வாயிலில் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி ஒன்று திரண்ட மருத்துவ மாணவர்கள், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு அமைதி போராட்டம் நடத்தினர். அரசு கல்லூரி என அறிவித்து விட்டு அரசு கட்டணம் வசூலிக்காமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாகவும், மழை, வெயில் என எது நடந்தாலும் தங்களது போராட்டம் ஓயாது என மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>