×

புதுச்சேரி அருகே போலீஸ் பஸ் டயர் வெடித்து டிரைவர் சாவு-8 காவலர் காயம்

புதுச்சேரி, டிச. 17: புதுச்சேரியிலிருந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக கஞ்சனூர் சென்றபோது, அரியூர் அருகே போலீஸ் பஸ் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் லோடு கேரியர் டிரைவர் பலியானார். இதில் 8 ஐஆர்பிஎன் காவலர்கள் (ரிசர்வ் பட்டாலியன்) காயமடைந்தனர். புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்க காவல்துறை அதிகாரிகள், போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் புதுவையில் இருந்து போலீஸ் வாகனங்களில் அதிகாரிகள், போலீசார் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூருக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை ஐஆர்பிஎன் காவலர்கள் 46 பேர், போலீஸ் பஸ்சில் கஞ்சனூர் புறப்பட்டனர். இந்த வாகனத்தை போலீஸ் டிரைவர் சுகுமார் ஓட்டிச் சென்றார். அந்த பஸ், வில்லியனூரை கடந்து அரியூர் இந்தியன் வங்கி அருகே சென்றபோது சாரல் மழை ெபய்த நிலையில் திடீரென வாகனத்தின் வலப்புற முன்பக்க டயர் வெடித்தது.இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம் தாறுமாறாக ஓடியது. அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி எதிரே வந்த காலி சிலிண்டர் லோடு கேரியர் வாகனம் மீது நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. லோடு ேகரியர் வாகன முன்பகுதி அப்பளம்போல் நசுங்கியது.

இதில் லோடு கேரியர் வாகனத்தை ஓட்டி வந்த, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவக்குமார் (21) படுகாயமடைந்தார். மேலும் போலீஸ் வாகனத்தில் பயணித்த தாமோதரன், ஆனந்தராஜ், கிருஷ்ணராஜ், நாகராஜ், டிரைவர் சுகுமார் உள்ளிட்ட 8 ஐஆர்பிஎன் காவலர்களுக்கும் கை, கால், முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.விரைந்து வந்த புதுச்சேரி மேற்கு டிராபிக் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்ஐ புனிதராஜ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய லோடு கேரியர் டிரைவர் சிவக்குமாரை மீட்டு ஜிப்மருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த ஐஆர்பிஎன் காவலர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிவக்குமார் சிறிதுநேரத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து காரணமாக புதுச்சேரி- விழுப்புரம் தேசிய ெநடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஓரமாக நிறுத்தி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. படுகாயமடைந்து ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் ஐஆர்பிஎன் காவலர்களை ஏடிஜிபி ஆனந்தமோகன், சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா, வடக்கு எஸ்பி சுபம்கோஷ் மற்றும் அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு கஞ்சனூர் சென்ற புதுச்சேரி போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மற்றொரு விபத்தில்  2 ஐஆர்பிஎன் காவலர் காயம் கோரிமேட்டில் ஏடிஜிபி தங்கும் விடுதி உள்ளது, இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐஆர்பிஎன் காவலர்கள் சையது யூசுப், குணபூஷ்ணம் ஆகியோர் நேற்றிரவு அலுவலக பணி நிமித்தமாக பைக்கில் காமராஜர் சாலையில் சென்றனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்த சையது யூசுப் தலையில் காயமடைந்தார். குணபூஷ்ணம் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். வடக்கு டிராபிக் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சையது யூசுப்புக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களையும் ஏடிஜிபி சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags : Police bus tire ,policemen ,Pondicherry ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்