×

செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விலை குறைந்தது

செஞ்சி, டிச. 17: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் தினமும் 10 ஆயிரம் மூட்டை வரை நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது சீசன் குறைவால் நேற்று 4ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு
வந்தன. நெல் மூட்டைகள் களம் மற்றும் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென பெய்த மழையால் நெல் மூட்டைகள் முழுவதும் நனைந்து சேதமடைந்தன. இதனால் நெல் மூட்டைகளை ரூ.500 முதல் ரூ.1,000 வரை குறைத்து வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்து நெல் மூட்டைகளை விற்காமல் திருப்பி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து மார்க்கெட் கமிட்டி சூப்பிரண்ட் பாஸ்கரிடம் கேட்டபோது, நெல்மூட்டைகள் குறைவாக இருப்பதாலும், அதனை அதே பகுதியில் வைத்து தேவையான நெல் மூட்டைகள் கிடைக்கப் பெற்றவுடன் வெளியே கொண்டு செல்வது வியாபாரிகளுக்கு வழக்கமாகிவிட்டது. இதனை பலமுறை எச்சரித்து வருகிறோம்.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் நனைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கமிட்டி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.

Tags : Ginger Market Committee ,
× RELATED செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் 6 ஆயிரம்...