நெல்லை மாவட்ட புதிய சிஇஓ பொறுப்பேற்பு

நெல்லை, டிச. 17: மாநில கல்வி தரவரிசை பட்டியலில் நெல்லை மாவட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய முதன்மைக்கல்வி அலுவலர் சிவகுமார் கூறினார். நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த செந்திவேல்முருகன், திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார் இவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கல்வி மாவட்ட அலுவலராக பணியாற்றிய சிவக்குமார், நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வில் நியமிக்கப்பட்டார்.  ஊட்டியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக  பணி நியமனம் பெற்ற இவர், தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கல்வி  மாவட்ட அலுவலராக பணியாற்றினார். இவர் நேற்றிரவு, நெல்லை வந்து புதிய சிஇஓவாக பொறுப்பேற்றார்.  முன்னதாக புதிய சிஇஓ சிவக்குமாருக்கு முதன்மைக்கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் டைட்டஸ் மற்றும் கண்காணிப்பாளர், அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கூறுகையில், தென்னகத்தின் ஆகஸ்போர்டாக விளங்கும் நெல்லை மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. தொடர்ந்து மாநில கல்வி தரவரிசை பட்டியலில் மேன்மை அடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories:

>