×

புளியங்குடியில் எலுமிச்சை வியாபாரிகளிடம் திமுக விவசாய அணி செயலாளர் குறை கேட்பு

புளியங்குடி, டிச. 17: புளியங்குடியில் எலுமிச்சை வியாபாரிகளின் குறைகளை திமுக விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ்.விஜயன் கேட்டறிந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக மாநில விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ்.விஜயன், பல்வேறு தரப்பினர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். புளியங்குடியில் உள்ள எலுமிச்சை மார்க்கெட்டில் எலுமிச்சை விவசாயிகளிடமும் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். புளியங்குடி எலுமிச்சை விவசாய சங்க பொருளாளர் முத்துப்பாண்டி அனைவரையும் வரவேற்று கோரிக்கைகளை எடுத்துரைத்தார். வயல்களில் புதிய போர் போடுவதற்கு மானியம் தர வேண்டும். சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மானியம் மூலம் ஏற்பாடு செய்து தர வேண்டும். புளியங்குடியில் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து விஜயன் பேசுகையில், உங்களது கோரிக்கைகள் நியாயமானவை. இன்னும் 4மாதத்தில் தேர்தல் வரும். நமது தலைவர் ஸ்டாலின் முதல்வராக வந்தவுடன் உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும், என்றார்.  நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை, மாநில வர்த்தக அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன், விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர், ஒன்றிய செயலாளர்கள் வாசு. முத்தையா பாண்டியன், கடையநல்லூர் செல்லத்துரை, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, மாணவரணி துணை அமைப்பாளர் காசிராஜன் ஜெகதீஸ் திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Agriculture Team Secretary ,lemon traders ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி