தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி, டிச.17:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அரங்கில் மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்

பெரியசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் கருணா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் அப்துல்லா ஆகியோர் தேர்தலின்போது அணியினர் செயல்படும் விதம், எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்திடும் விதம்’ குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மகளிரணி கஸ்தூரிதங்கம், மீனவரணி அந்தோணிஸ்டாலின், சேசையா, மருத்துவரணி அருண்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆனந்த்கேபிரியல்ராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வின், சங்கரநாராயணன் மற்றும் ஜான்சன்டேவிட், ரவி, கதிரேசன், செந்தில்குமார், அந்தோணிகண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>