தூத்துக்குடியில் ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி, டிச. 17: மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ்   நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறை குறித்தும், நோய் எதிர்பாற்றலுக்குரிய பயிற்சி முறைகள் குறித்தும் விளக்கமளித்தார். மேலும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலுக்குரிய மருந்துகள் வழங்கப்பட்டது.  இதில், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>