ஜல்ஜீவன் திட்ட செயல்பாடுகள் மத்திய குழுவினர் ஆய்வு பெரணமல்லூர் பகுதிகளில்

பெரணமல்லூர், டிச.17: பெரணமல்லூர் பகுதிகளில் ஜல்ஜீவன் திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், பெரணமல்லூர் அடுத்த கொருக்காத்தூர், மணலவாடி கிராமங்களில் ₹5.43 லட்சம் மதிப்பில் 172 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய குழு அதிகாரிகளான அம்பரிஷ், அமித்ரஞ்சன் ஆகியோர் நேற்று, குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், மத்திய குழுவினர் கூறுகையில், `இத்திட்டத்தில் நிமிடத்திற்கு 5 லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, ஒரு குடும்பத்திற்கு தினசரி 55 லிட்டர் சுத்தமான வழங்கப்படும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். ஆய்வின்போது, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா, திட்ட செயற்பொறியாளர் ராஜாமுனுசாமி, செயற்பொறியாளர்கள் சுந்தரேசன், தணிகாசலம், உதவி இயக்குனர்கள் ரவிச்சந்திரன், சுவாமிநாதன், டார்வின் குமார், சபாநாயகம், பிடிஓக்கள் மயில்வாகனன், சீனிவாசன், ஊராட்சி தலைவர் உமாதேவி உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More