×

நைஜீரியாவில் தொடரும் சோகம்: படகு மூழ்கியதில் 60 பேர் பலி

நைஜர்: நைஜீரியாவில் படகு விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இருப்பினும் அந்நாட்டு மக்களுக்கு படகு போக்குவரத்துக்குதான் அதிக முக்கியத்தும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலம் மலாலே மாவட்டத்தில் உள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு 80 பேரை ஏற்றி கொண்டு ஒரு படகு சென்றது. அப்போது படகு அதிக சுமையுடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த படகு மரத்தின் அடிப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. தண்ணீரில் மூழ்கி அனைவரும் தத்தளித்தனர்.

தகவலறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nigeria ,Niger ,Malale district ,north-central Niger state, Nigeria… ,
× RELATED அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு...