×

9 மாத ஊரடங்கு தளர்வுக்கு பின் படகு குழாமில் பிறந்தநாள் கொண்டாடிய சுற்றுலா பயணிகள்

செய்யூர்: ஊரடங்கு தளர்வால் 9 மாதத்துக்கு பின் முதலியார்குப்பம் படகு குழாம் நிர்வாகத்தின் சார்பில் அலங்கரிக்கப்பட்ட படகில் சுற்றுலா பயணிகள்,பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர். செய்யூர் அடுத்த முதலியார்குப்பத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு குழாம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு வகையான படகுகளில் சவாரி செய்து மகிழ்ச்சியடைவர். கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், படகு குழாம் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு பின், அரசின் உத்தரவுபடி மீண்டும் திறக்கப்பட்டது. நீண்ட மாத இடைவேளைக்கு பின் படகு குழாம் திறக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.

இதில், சுற்றுலா பயணி ஒருவர் தனது பிறந்தநாளை, படகில் கொண்டாட விரும்பினார். இதையடுத்து, தனது விருப்பத்தை படகு குழாம் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார். அதன்பேரில், படகு குழாம் நிர்வாகத்தினர் 8 பேர் பயணிக்கும் ஒரு படகை தயார் செய்து, அதில் வண்ண காகிதங்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்து அழகுபடுத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த சுற்றுலா பயணி, தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் அந்த படகில் பிறந்தநாள்  கேக் வெட்டி கொண்டாடினார்.

Tags : birthday ,boat crew ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி