சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் மண் சரிவு ஏற்பட்ட இடம் சீரமைப்பு

வத்திராயிருப்பு, டிச.16: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பாதை சீரமைக்கப்பட்டது. சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்கு செல்லும் கோணதலவாசல் பகுதியில் கடந்த 13ம் தேதி மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தாணிப்பாறை வழியே கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. 200 பக்தர்கள் இரவில் கோயில் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் காலையில் தீபாவளி தினத்தன்று கீழே இறக்கிவிடப்பட்டனர்.

இதையடுத்து சுந்தரமாகலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் தற்காலிகமாக மண் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு பாதை சீரமைக்கப்பட்டது. தற்போது கடந்த 12ம் தேதி முதல் நாளை வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதை சீரமைக்கப்பட்டதால் கோணதலவாசல் வழியே பக்தர்கள் மீண்டும் சிரமின்றி சென்று வருகின்றனர்.

Related Stories:

>