×

தேனியில் தமமுகவினர் மனிதசங்கிலி

தேனி, டிச. 16: தேனி நேரு சிலை அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாநில மகளிரணி செயலாளர் நளினி சாந்தகுமாரி தலைமை வகித்தார். போராட்டத்தில் பள்ளன், குடும்பன், தேவேந்திர குலத்தான், பண்ணாடி, வாதிரியான், காலாடி, கடையன் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட கோரியும், தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் தேனி மேற்கு மாவட்ட தலைவர் குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் திருமுருகன்,  மாவட்ட பொருளாளர் வேந்தர் பாலா, கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி அழகுராணி, கிழக்கு மாவட்ட தொண்டரணி மாவட்ட செயலாளர்  பிரேம்ஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். மனித சங்கிலி நேரு சிலையில் இருந்து பங்களா மேடு வரை நடந்தது.

Tags : Theni ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...