×

4 மாதமா பயனில்லாமல் கிடக்கும் குழாய்க்கு மாலையணிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: ஆண்டிபட்டியில் மக்கள் ஆவேசம்

ஆண்டிபட்டி, டிச. 16: ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சக்கம்பட்டியில் 2வது வார்டு எஸ்விஎஸ் தெருவில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக அங்கேயே ஆழ்துளை கிணறு, தண்ணீர தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து போனது. அதன்பின் பேரூராட்சி ஊழியர்கள் ஆழ்துளை கிணற்றில் இருந்த மோட்டாரை பழுது நீக்க கழற்றி எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை மோட்டாரை சரிசெய்து மாற்றவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத நிலையே தொடர்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பயன்பாடின்றி உள்ள குழாய், தொட்டிகளுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனே மோட்டாரை சரிசெய்து, ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

Tags : Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி