×

கோட்டைக்கரை ஆற்றில் முட்புதர்களை அகற்ற வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.16: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கோட்டைகரை ஆற்றின் படுகையானது சருகணி ஆற்றின் கடைக்கோடி பகுதியில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை, சேந்தனேந்தல் ஓடை வழியாக மழை காலங்களில் ஆற்றுநீர் கடலில் கலக்கிறது. இந்த ஆறு ஆனந்தூர், கோவிந்தமங்கலம், திருத்தேர்வளை, ஆயங்குடி, கொக்கூரணி, சனவேலி, குலமாணிக்கம், அழியாதான்மொழி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை ஒட்டிய நிலையில் செல்கிறது.

இத்தகைய முக்கியதுவம் வாய்ந்த இந்த ஆற்றில் கருவேல மரங்களும் முட்புதர்கள், நாணல் புற்கள் சூழ்ந்தும் உள்ளதால், மழை காலங்களில் உபரி நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, கிராம பகுதிகளிலும், விளை நிலங்களிலும், தண்ணீர் புகுந்து பாதிப்புக்குள்ளாவது வழக்கமாகவே தொடர்கிறது.
மேலும் ஆற்று பகுதியில் புதர்கள் சூழ்ந்துள்ளதால், மணல் திருட்டு கும்பல்கள் இதை சாதகமாக்கி, மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தொடர்கிறது. தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், ஆற்றில் அடர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : removal ,Fort River ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...