×

மக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்

மேலூர், டிச.16: கிராமமக்களின் போராட்டத்தை தொடர்ந்து மேலூர் அருகே டாஸ்மாக் கடையை 3 மாதத்திற்குள் அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலூர் அருகே வெள்ளலூர் ஊராட்சியில் உறங்கான்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், கடையை அகற்ற வேண்டும் எனவும் கூறி நேற்று முன்தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதாக அப்போது போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று ஆர்டிஓ அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆர்டிஓ, டாஸ்மாக் மதுரை வடக்கு மாவட்ட மேலாளர், உதவி மேலாளர், மேலூர் தாசில்தார், வெள்ளலூர் ஆர்ஐ, விஏஓ கலந்து கொண்டனர். கிராமத்தின் சார்பாக ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர். வெள்ளலூர் மக்களின் கோரிக்கையான டாஸ்மாக் கடையை மூடுவது, 3 மாத காலத்திற்குள் வெள்ளலூர் ஊராட்சி எல்லையை விட்டு அப்புறப்படுத்துவது, அதுவரை மாலை நேரங்களில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Tags : Tasmac ,protest ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்