×

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து, மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் சார்பில் வைக்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையம் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகளுக்காக ரூ.1,964 கோடி ஒதுக்கி நிர்வாக ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 13 ரயில் நிலையங்களுடன் 15.46 கி.மீ. தூரத்துக்கு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : METRO RAIL ,CHENNAI AIRPORT ,GLAMPAKAM ,TAMIL ,NADU ,Chennai ,Tamil Nadu government ,Klampakkam ,Glampakkam ,station ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்...