×

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தடையை மீறி தீபம் ஏற்றிய இந்து அமைப்பினர் கைது

திருப்பரங்குன்றம், டிச.16:  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் போலீசாரின் தடையை மீறி தீபம் ஏற்றிய இந்து அமைப்பை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் புரதான சின்னமான தீப தூண் உள்ளது. இந்த தீப தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இடத்தில் தீபம் ஏற்ற காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள தடை செய்யப்பட்ட தீப தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுப்பிரமணியசுவாமி கோயில் உதவி ஆணையர், புராதன சின்னத்தை பாதுகாக்கவும் தடையை மீறி  தீபம் ஏற்றிய மர்ம நபர்கள மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி போலீசில் புகார் மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது ெதாடர்பாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மாவட்ட செயலாளர்களான  வில்லாபுரத்தை சேர்ந்த செல்வகுமார்(27), கீரைத்துறையை சேர்ந்த அரசுபாண்டி(28) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Tags : activists ,hill ,Thiruparankundram ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!