×

திண்டுக்கல்லில் விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், டிச. 16: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் 19வது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோக்கஸ் வளவன் தலைமை வகிக்க, நில உரிமை மீட்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பரசு, தொகுதி செயலாளர் மைதீன் பாவா, பாராளுமன்ற செயலாளர் ஆபிரகாம் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜா, நகர் பொருளாளர் நடராஜ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வீரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : VC ,party protests ,Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...