×

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி திண்டுக்கல்லில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பெண்கள் உள்பட 200 பேர் கைது

திண்டுக்கல், டிச. 16: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், டெல்லியில் 19 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய குழு சார்பில் நேற்று முன்தினம் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இந்நிலையில் நேற்று 2வது நாளாக திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள வருமான வரி அலுவலகம் முன்பாக முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags : protest ,withdrawal ,Dindigul ,women ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!