×

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்?: மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலை கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்துடன் நீதிபதிகள், புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரகாஷ் கர்காவா அடங்கி அமர்வு, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை சென்னை மாநகராட்சி தவறிவிட்டதாக பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத பொருட்களை கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பது உறுதிசெய்யாமல் அவற்றை கரைக்க அனுமதி வழங்கியதாக தெரிவித்த தீர்ப்பாயம், ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிய தீர்ப்பாயம், ஏன் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியது. கட்டணங்கள் வசூலித்தால், அந்த நிதியை வைத்து சிலை கரைப்புக்குப் பின் கடற்கரையை சுத்தப்படுத்தலாம் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்தது.

Tags : Vinaikar ,Green Tribunal ,Chennai ,Vinayagar ,National Green Tribunal ,South Zone National Green Tribunal ,Badnapakkam ,
× RELATED புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்;...