வத்தலக்குண்டு அருகே தொழிற்பயிற்சி துவக்க விழா

வத்தலக்குண்டு, டிச. 16: வத்தலக்குண்டு அருகே காமாட்சிபுரத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய இளம்பெண்களுக்கான வாழ்வாதார தொழிற்பயிற்சி துவக்க விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா தலைமை வகிக்க, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் முருகன் முன்னிலை வகித்தார். அயயம்பாளையம் சக்தி அறக்கட்டளை செயலாளர் ஜெயா வரவேற்க, தலைவர் ஜோதி அறிமுக உரையாற்றினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் கனரா வங்கி முதன்மை மேலாளர் மாரிமுத்து விழா மாடலை வெளியிட்டு பேசினார். இதில் ஊர்நல அலுவலர்கள் பசும்பொன் தேவி, அழகம்மாள், ஒனறிய கவுன்சிலர் பெனினா தேவி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, துணை தலைவர் செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர் அழகரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நாகபிரியா நன்றி கூறினார்.

Related Stories:

>