×

பாபநாசம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூர், செப்.3: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பண்டாரவாடை, ரெகுநாதபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் மாவட்ட ஆதி திராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல், கிராம வளர்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி அய்யாராசு, திட்டக்குழு உறுப்பினர் தாமரைச் செல்வன்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி உள்ளிட்டோர் முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து, 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர்கள் தர், பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Stalin ,Camp ,Babanasam Union ,Thanjavur ,Thanjavur District Babanasam Union Bandarawada ,Regunathapuram ,Special Camp ,District Adhi Thravidar ,Tribal Welfare Officer ,Ravichandran ,PAPANASAM DISTRICT PALANIVEL, RURAL DEVELOPMENT DISTRICT ,
× RELATED ஓய்வூதியர் தின விழா