×

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 4 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்

புதுக்கோட்டை, செப்.3: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நாளை நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் கடந்த ஜூலை 15 முதல் வரும் அக்டோபர் 21 வரை நடைபெறுகிறது. “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில், பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வுகாணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

மாவட்டத்தில் நாளை(4ம் தேதி) புதுக்கோட்டை மாநகராட்சி 26, 33-வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு புதுக்கோட்டை, சத்தியமூர்த்தி நகர், அன்னை கிராண்ட்லிலும்; அரிமளம் – 7 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்குகீழப்பனையூர் ஊராட்சி, கீழப்பனையூர் சமுதாயக் கூடத்திலும்; அறந்தாங்கி 10 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு அறந்தாங்கி தாலுகா, தாந்தாணி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும்; விராலிமலை – 14 ஊராட்சி ஒன்றிய பகுதிபொதுமக்களுக்கு விராலிமலை தாலுகா, மேலப்பச்சக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில், பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Tags : Stalin Project ,Pudukkottai district ,Pudukkottai ,Stalin with ,Collector ,Aruna ,
× RELATED ஓய்வூதியர் தின விழா