×
Saravana Stores

அருமனையில் முதல்வர் வருகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விழா மைதானத்தில் எஸ்பி ஆய்வு

அருமனை, டிச. 16: அருமனை  வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  ஆண்டுதோறும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 23வது கிறிஸ்துமஸ்  விழா டிச.22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. கடந்த கால விழாக்களில்  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக  பொதுச்செயலாளர் தினகரன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கேரள முன்னாள்  முதல்வர் உம்மன்சாண்டி, நடிகர் சரத்குமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஜிகே.வாசன் உட்பட பலர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.


இந்த ஆண்டு  கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு  விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று வரும் 22ம்  தேதி மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு  பேசுகிறார். இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும்  வகையில், குமரி மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் இன்று அருமனையில் கிறிஸ்துமஸ்  விழா நடக்கும் மைதானம், மேடை அமைக்கும் இடம், முதல்வர் வந்து செல்லும் பாதை  போன்ற இடங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஏடிஎஸ்பி ஈஸ்வரன், தக்கலை  டிஎஸ்பி ராமச்சந்திரன், அருமனை இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும்  காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : inspection ,SP ,visit ,Christmas Festival Grounds ,Chief Minister ,Arumana ,
× RELATED காவல் நிலையங்களில் எஸ்பி திடீர் ஆய்வு