×

ராஜபாளையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், செப்.3: ராஜபாளையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சமுசிகாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில தலைவர் சோமசுந்தரம், மாநில குழு உறுப்பினர்கள் முனியாண்டி, சக்திவேல், ஜீவானந்தம் உள்ளிட்டோர் பேசினர். இதில் விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு குரூப் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Rajapalayam ,Power Loom Workers Union ,CITU ,Marimuthu ,Samusikapuram ,Somasundaram ,
× RELATED ஓய்வூதியர் தின விழா