×

ஆலய தேர் பவனி

பரமக்குடி, செப்.3: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் புனித அலங்கார மாதா ஆலயம் உள்ளது. கடந்த வாரம் ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் நவநாள் திருப்பலி விழாவையொட்டி, அலங்கார மாதா கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.முக்கிய நிகழ்வாக நேற்று, சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம், பரமக்குடி பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று திருத்தேர் பவனி நடைபெற்றது.

ஐந்து முனைச் சாலை ஓட்டப்பாலம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் வலம் வந்து சர்ச்சை மீண்டும் அடைந்தது. சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு பணியாளர்கள், இறைமக்கள், பங்குமக்கள், அமலவை அருள் சகோதரிகள், அன்பியங்கள் பங்கேற்றனர். நேற்று கொடி இறக்கப்பட்டு நிறைவு பெற்றது.

Tags : Paramakudi ,Aranaka Mata temple ,Paramakudi Five Point Road ,Ramanathapuram district ,Navanaal Triupali festival ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...