தேவதானப்பட்டி, செப். 3: தேவதானப்பட்டி எஸ்.ஐ.,வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று தேவதானப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேவதானப்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்த முத்துச்சாமி (66) என்பவர் தனது வீட்டில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
